நீங்கள் ப்ளாக்ஸ்பாட்டின் பெயரை மதியின்மை என்று படித்திருப்பீராயின், அது மடியின்மை என்று தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
ஆங்கிலத்தில் "Procrastination" "lethargy" என்ற பதங்கள் உண்டு.
இப் பதங்களுக்கு சோம்பிக் கிடப்பது, சோம்பலால் செயலற்றுக் கிடப்பது என்று அர்த்தம். இவற்றிற்கு நேரெதிர் பதமாக "alacrity" என சொல்லலாம்.(அர்த்தம் தேடுவீராக!)
அது சரி, பேசுபொருளுக்கும் உம் தீசிஸ்க்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்டால் , இந்த "alacrity" என்பதை மறைமுகமாக கூறி சோம்பலற்ற ஸத்நிலையை சொல்லும் வார்த்தை "மடியின்மை".